"ஏற்கனவே நாலு பேரு எரும மாதிரி நிக்கிறான். இதுல நான் வேறயா?'’ -என "மருதமலை' படத்தில் வரும் கல்யாண ராணியைப் பார்த்து நடிகர் வடிவேல் பஞ்ச் டயலாக் அடிக்கிற மாதிரி, பார்க்கிற ஆண்களுக்கெல்லாம் காதல் வலை வீசியிருக்கிறாள் ஒரு இளம்பெண். அதில் தடுக்கி விழுந்த நான்கு இளைஞர் களை, அடுத்தடுத்து திரு மணமும் செய்துகொண்டு தன் அதிரடிகளை அரங் கேற்றித் திகைக்கவைத்திருக் கிறாள்...

யாரந்த கில்லாடி லேடி என்கிறீர்களா?

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி நகரின் திடையைச் சேர்ந்தவர் சிவச்சந்திரன். 27 வயதான இவர் தனியார் வங்கி ஒன்றில் கடன் வசூல் செய்யும் பணியில் இருந்து வருகிறார். இவருக்கு கடந்த வாரம் சீர்காழியில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றது. அதற்கான பிளக்ஸ் பேனர்களையும், திருமண போட்டோக்களையும் மாப்பிள்ளை சிவச்சந்திரனும் அவரது நண்பர்களும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டிருந்தனர்.

rani

சிவச்சந்திரனின் திருமண போட்டோவை பார்த்து புத்தூரை சேர்ந்த அவரது நண்பர் ஒருவர், ’இந்தப் பெண்ணை இதற்கு முன்பு எங்கேயோ பார்த்திருக் கிறோமே’ என்று சந்தேகமாகி, அதை புத்தூர் வாய்க் கால்கரை பகுதியைச் சேர்ந்த நெப்போலியனிடம் காட்ட, அதைக்கண்டு ஷாக்கான அவர், உடனே புது மாப்பிள்ளை சிவச்சந்திரனை தொடர்புகொண்டார்.

"பதட்டப்படாமல் கேளுங்க. எனக்கும் நீங்கள் திருமணம் செய்துகொண்டிருக்கும் அந்தப் பெண்ணுக் கும் ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது, அவர் பெயர் மீரா. தான் ஒரு நர்ஸ் என்று கூறிக்கொண்டு, சில வருடங்களுக்கு முன் என்னிடம் அறிமுகமானாள். நாங்கள் இருவரும் நெருங்கிப் பழகியதோடு, முறைப்படி கோயிலில் வைத்து திருமணமும் செய்துகொண்டோம். பின்னர் கடலூர், சிதம்பரம், சென்னை என பல ஊர்களிலும் வசித்துவந்தோம். 2021-ல் சென்னையில் வசித்து வந்தபோது, எந்தத் தகவலையும் என்னிடம் சொல்லாமல், திடீரென்று என்னை விட்டுவிட்டு மீரா சென்றுவிட்டாள். இதனால் அதிர்ச்சியடைந்த நான், பல இடங்களிலும் தேடியும் அவள் கிடைக்கவில்லை. அதனால் பிரமை பிடித்தவனைப் போல, அவள் எங்கு இருக்கிறாள் என்று தெரியாமல் களைத்துப்போனேன். இப்போது என் மனைவி மீராவை நீங்கள் திருமணம் செய்துகொண்ட விளம்பரத்தைப் பார்த்து ஷாக்காகி விட்டேன். என்னை ஏமாற்றியது போலவே அவள் உங்க ளையும் ஏமாற்றியிருக்கிறாள்'' என்று கூறி, சிவச் சந்திரனை பதட்டத்தில் ஆழ்த்தினார். நெப்போலியன் கூறியதைக்கேட்டு அதிர்ந்துபோன சிவச்சந்திரன், தனது புது மனைவியை, எங்கும் தப்பிச் சென்றுவிடாத படி பாதுகாப்பாக வைத்துவிட்டு, சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தார்.

Advertisment

இதைத் தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் செல்வி தலைமையிலான போலீஸ் டீம், நிஷாந்தி, லட்சுமி, மீரா என்றெல்லாம் பல பெயர்களில் உலாவந்த அந்த கல்யாண ராணியை மடக்கி, விசாரணை மேற் கொண்டனர். அப்போது, பல சுவாரஸ்யமான தகவல்கள் வெளியே வந்திருக்கிறது.

இதுகுறித்து விசாரணை டீம் காக்கிகளிடம் நாம் கேட்டபோது....

rani

Advertisment

"சீர்காழி அருகே உள்ள கொடியம்பாளையம் மீனவர் கிராமத்தில் பிறந்தவர்தான் இந்த லட்சுமி. இவருக்கும் பழையாறையைச் சேர்ந்த சிலம்பரசன் என்பவருக்கும் முறைபடி திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு தர்ஷன் என்கிற மகனும் ரேணு என்கிற மகளும் உள்ளனர். சிலம்பரசன் 10 ஆண்டுகளுக்கு முன்பு விபத்து ஒன்றில் இறந்துவிட்டார். அதன்பின் லட்சுமியின் போக்கு பிடிக்காத சிலம்பரசனின் குடும்பத்தினர் அவரைக் கண்டித்திருக்கிறார்கள். அதன்பிறகு மகனை தனது கொழுந்தனாரிடம் ஒப்படைத்துவிட்டு, மகளோடு தனது அம்மா வீட்டில் இருந்துகொண்டு சிதம்பரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் லட்சுமி வேலை பார்த்து வந்துள்ளார்.

அப்படி வேலைக்குப் போகும்போது, புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த பெயிண்டரான நெப்போலியனோடு பேருந்து பயணத்தில் அறிமுகமாகி, தனது பெயர் மீரா எனவும், சிதம்பரம் அண்ணாமலை மருத்துவக் கல்லூரியில் நர்ஸாக வேலை பார்ப்பதாகவும் கூறி, அவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இருவரும் கணவன் மனைவியாக மூன்று ஆண்டுகள் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். அதன் பின்னர் 2021ஆம் ஆண்டு சிதம்பரம் கோல்டன் நகரைச் சேர்ந்த ராஜா என்பவரோடு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமாகி, அவரிடம் தனது பெயர் நிஷாந்தினி என்றும், தான் எம்.பி.பி.எஸ். எம்.எஸ். படித்துவிட்டு, மருத்துவராக இருப்பதாகவும் கூறி, அவரையும் காதல் வலையில் விழவைத்து, திருமணம் செய்து கொண்டிருக்கிறார். அவரோடு சிதம்பரத்தில் குடும்பம் நடத்தியும் வந்துள்ளார். ஒரு கட்டத்தில் ராஜாவிடம் தான் கோயம் புத்தூருக்கு மாற்றலாகிப்போகிறேன் என கூறிவிட்டுக் கிளம்பியிருக்கிறார்.

அதன் பின்னர் கடந்த 2024ஆம் ஆண்டு சீர்காழி திட்டை கிராமத்தைச் சேர்ந்த சிவச்சந்திரனிடம் தன்னை லட்சுமி என அறிமுகப்படுத்திக்கொண்டு, தான் ஒரு டாக்டர் என்றும், சிதம்பரத்தில் வேலை பார்ப்பதாகவும் அறிமுகப்படுத்திக்கொண்டி ருக்கிறார். பின்னர் இருவரும் நெருங்கிப் பழகிய நிலையில், கடந்த 20ஆம் தேதி சிவச்சந்திரனுக்கும், லட்சுமிக்கும் பிரமாண்ட மாகத் திருமணம் நடந்துள்ளது. திரு மணத்தின்போது நண்பர்கள் வைத்த பேனர், வலைத்தளங்களில் பரவிய பிறகே, லட்சுமியின் அத்தனை வண்டவாளங்களும் இப்போது அம்பலத்துக்கு வந்திருக்கிறது''’என்றார்கள் புன்னகையோடு.

சீர்காழி அனைத்து மகளிர் காவல் நிலையக் காவலர் ஒருவர் நம்மிடம் கூறுகை யில்” லட்சுமியின் மிடுக்கான தோற்றமும், பணக்காரப் பெண்ணை போன்ற நடவடிக்கை யும் அவரைப் பார்க்கும் ஆண்களை ஈர்த்திருக்கிறது. கண்களாலேயே லட்சுமி தூண்டில் வீசியிருக்கிறாள். இதனால் பல ஆண்கள் அவரைச் சுற்றிச் சுற்றி வந்திருக் கிறார்கள். அவர்களில் சிலர் அவரைத் திருமணமும் செய்துகொண்டு ஏமாந்திருக்கிறார்கள். லட்சுமியால் பாதிக்கப்பட்ட அனைத்து ஆண்களும் கொள்ளிடம் பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். இதைவிட சுவாரஸ்யம் என்னவென்றால், லட்சுமி மீது புகார் கூறுகிறவர்கள் அனைவருமே பணக்காரர்கள் இல்லை.

அதுமட்டுமல்ல, இவர்களில் எவரும், லட்சுமியிடம் பணத்தையோ, பொருளையோ இழந்ததாகத் தெரிவிக்க வில்லை. முதல் கணவர் இறப்பிற்கு பிறகு, அடுத்தடுத்து சிலரைத் திருமணம் செய்துள்ளார். அவர்களின் நடத்தையில் ஏற்பட்ட மாற்றமும், வெறுப்பும்தான் அவர்களை விட்டு விலகக் காரணம் என்று லட்சுமி கூறுகிறார். அதோடு தன்னை எம்.பி.பி.எஸ். டாக்டர் எனவும், தான் 50,000 சம்பளம் வாங்குவதாகவும் அவர் பில்டப் செய்ததால், அவரது வார்த்தையை நம்பி பலரும் அவரது வலையில் விழுந்துள்ளனர்.

இதற்கிடையில் இவர்களையும் தாண்டி, திருப்பூர் பகுதியைச்சேர்ந்த ஒருவர் லட்சுமியைத் திருமணம் செய்துகொண்டு, வெளிநாட்டில் வேலை பார்ப்பதாகவும் தெரிகிறது. லட்சுமி திருமணம் செய்துகொண்ட அத்தனை பேரிடமும், நம் காதலுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரி விப்பார்கள், அதனால் வீட்டிற்கு தெரியாமல் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று நடித்துள்ளார். அவர்களும் இதை நம்பி டாக்டர் பெண், அதிலும் அழகா இருக்கிறார் என்பதால், பலத்த பாதுகாப்புடன் திருமணம் செய்துள்ளனர். சீர்காழி திருமணத்திற்கு வருவதற்கு முன்பு கோயம்புத்தூர் மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் இருந்து வருவதுபோல பாவ்லா செய்துள்ளார். இதே போல சிதம்பரம் மெடிக்கல் காலேஜில் வேலை பார்ப்பதாக, அங்கு சென்று அட்டெண்ட் டென்ஸில் கையெழுத்தும் போட்டு வந்துள்ளார். இது எப்படி சாத்தி யமாகும் எனத் தெரியவில்லை. சிறையில் இருக்கும் லட்சுமியை கஸ்டடி எடுத்து விசாரிக்க இருக்கிறோம். அப்போது தான் அவர்பற்றிய முழு ரகசியங்களும் வெளியே வரும்'' என்கிறார் திகைப்பு மாறாமல்.

லட்சுமியால் ஏமாற்றப்பட்ட இளைஞர்களில் ஒருவரான சிதம்பரத்தைச் சேர்ந்த அவரிடம் கேட்டபோது... "தயவுசெய்து என் பெயரையோ, படத்தையோ வெளிப்படுத்தாதீங்க. அந்த லட்சுமி, பணத்திற்காக இப்படி செய்த தாகவும் தெரியவில்லை. எனக்கு கோயம்புத்தூர்லதான் அறிமுகமானார். சிதம்பரம் மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக இருப்பதாகச் சொன்னார். திருமணத்திற்கு முன்பு கோவை மருத்துவக் கல்லூரியிலும், திருமணத்திற்கு பிறகு சிதம்பரம் மருத்துவக் கல்லூரியிலும் அவரைக் கொண்டுபோய் விட்டுவிட்டு வந்திருக்கிறேன். அங்கெல்லாம் எமர்ஜென்சி வார்டுவரை லட்சுமி சகஜமாகப் போவார். என்னால் இப்பக்கூட அவர் போலி என்பதை நம்ப முடியவில்லை. ஆனால் அவர் பன்னிரெண்டாம் வகுப்புதான் படித்துள்ளதாகத் தெரிகிறது, இப்படி எதுக்காக செய்தார்னு புரியல. அவர் ஏன் இப்படி அடுத்தடுத்த ஆண்களை ஏமாற்றி னார் என்று நான் இன்னும் குழம்புகிறேன்''’ என்றார், இன்னும் லட்சுமி மீதான மையல் தீராதவராய்.

வெறும் 12ஆம் வகுப்பு மட்டுமே படித்த லட்சுமி, மருத்துவக் கல்லூரி களுக்குள் எப்படி சகஜமாகப் போய் வந்தார்? என்பது போன்ற கேள்விகள் எழுகின்றன.

கல்யாண ராணியாக வலம் வந்த லட்சுமியின் கதையை மேலும் துருவினால், இன்னும் எத்தனை... எத்தனை திருமண லீலைகள் வெளிப்படுமோ? இப்போது லட்சுமியால் ரொம்பவே மிரண்டு போயிருக் கிறது மயிலாடுதுறை மாவட்டம்.